பிரபல ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சமுதித்த வசிக்கும் பகுதிக்கு போதியளவு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சமுதித்த பிலியந்தல நீதவான் நீதிமன்றில் ஊடகவியலாளர் சமுதித்த கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தது.
எனினும் தமக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சமுதித்த குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 14ம் திகதி ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி…
ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்லத்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவொன்று தாக்குதல்
ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீது தாக்குதல்: வெளியானது சிசிடீவி காணொளி
ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டின் மீதான தாக்குதல்: கட்சித் தலைவர் ஒருவரிடமும் விசாரணை