‘இன்கேம் இன்கேம் காவாலே’ பாடல் காட்சிகள் இல்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களைக் கடக்கவே முடியாது. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இளையோர்களின் பேவரைட் ரீல் ஜோடி.
கடந்த 2017-ம் ஆண்டு, ராஷ்மிகாவுக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் நிச்சயம் ஆகியிருந்தது. ஆனால், 2018-ம் ஆண்டே இருவரும் இந்த நிச்சயதார்த்தம் திருமணம் நோக்கிச் செல்லாது எனத் தங்களின் உறவை முறித்துக்கொண்டனர்.

இந்நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் டேட்டிங் செய்கிறார்கள். விரைவில் திருமணம் எனச் செய்திகள் பரவின. இவர்கள் ரியல் ஜோடியாக மாறுவார்களா என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதற்கான பதிலை மறைமுகமாக விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவருக்கும் கல்யாணம் முடிவாக உள்ளது எனப் பரவிய வதந்திக்கு ‘நான்-சென்ஸ்’ என்று சர்காஸ்டிக் ஆக பதிவிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.
As usual nonsense..
Don’t we just
❤️ da news!— Vijay Deverakonda (@TheDeverakonda) February 21, 2022
“வழக்கம் போல நான்-சென்ஸ், அப்படிலாம் எதுவும் கிடையாது. நாம் இந்த மாதிரி செய்திகளை மட்டுமே விரும்புகிறோம்” என்கிற அவரது ட்விட் வைரலாகி வருகிறது. ராஷ்மிகா சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “எனக்கு தெரியவில்லை. திருமணம் செய்து கொள்ளுமளவுக்கு இன்னும் வயதாகததால், நான் அதை பற்றி யோசிக்கவில்லை. ஆனால், கம்ஃபோர்ட் ஆக வைத்துக் கொள்பவராக அமைய வேண்டும்” என தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
இவர்கள் இருவரும் இந்தாண்டு வெவ்வேறு படங்களின் வழியாக பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.