ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் சொல்வதென்ன?

நாட்டில் கொரோனாவின் தாக்கம் என்பது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அழைப்பு விடுத்து வருகின்றன.

குறிப்பாக ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் பலவும் மார்ச் மாதத்தில் இருந்து அழைப்பு விடுக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ரூ.400 கோடிக்கு வீடு, 3 விமானம், ஏகப்பட்ட கார்.. ராஜ வாழ்க்கை வாழும் கௌதம் அதானி..!

இதற்கிடையில் சமீப நாட்களாக பல செய்திகள் ஊழியர்களை மீண்டும் வரும் படி ஐடி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ளன.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

இது குறித்து வெளியான ஜீ நியூஸ் செய்தி அறிக்கையின் படி, பெரிய ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு திரும்ப அழைக்க தயாராகி வருகின்றன. முன்னதாக செப்டம்பர் முதல் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர கூறியிருந்த நிறுவனங்கள், ஓமிக்ரான் அச்சம் காரணமாக மிண்டும் அந்த முடிவினை தள்ளி வைத்துள்ளன.

ஆபீஸ் வாங்க

ஆபீஸ் வாங்க

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்து பணிபுரிவதை நிறுத்தி விட்,டு அலுவலகத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இது படிப்படியாக அலுவலகத்திற்கு வர கூறலாம் என செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன.

விப்ரோ
 

விப்ரோ

இதற்கிடையில் விப்ரோ நிறுவனம் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட உயர் அதிகாரிகளை, மார்ச் 3 முதல் அலுவலகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியிருப்பினும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்றும், மற்ற நாட்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும் நியூஸ் 18 அறிக்கை தெரிவித்துள்ளது.

 காக்னிசண்ட்

காக்னிசண்ட்

இதே மற்றொரு டெக் நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனமும் அலுவலகத்தினை திரும்ப திறக்க உள்ளதாக தெரிகிறது. எனினும் இது ஊழியர்களுக்கு கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றலாம் என தெரிவித்துள்ளது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

டிசிஎஸ்

டிசிஎஸ்

நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் அதன் ஊழியர்களை ஹைபிரிட் மாடலில் பணிபுரிய கூறியுள்ளதாக தெரிகிறது. ஆக அவர்கள் வழக்கம்போல வீட்டில் இருந்தும் பணிபுரிவார்கள், அலுவலகத்திற்கு வந்தும் பணிபுரிவார்கள் என தெரிகிறது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் ஊழியர்களும் இதேபோல ஹைபிரிட் மாடலிலேயே பணிபுரிவார்கள் என தெரிகின்றது. இந்த ஹைபிரிட மாடல் பணியே இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என கூறப்படுகின்றது.

இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்த ஊழியர்களுக்கு, நிச்சயம் ஒரு நெகிழ்வினை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். என்ன தான் வீட்டில் இருந்து பணியாற்றினாலும், அலுவலகம் சென்று திரும்புவது ஊழியர்களுக்கு ஒரு புத்துணர்வை அளிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS, Infosys, wipro, cognizant to ask employees to Work from office again

TCS, Infosys, wipro, cognizant to ask employees to Work from office again/ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் சொல்வதென்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.