குண்டூர் ராமர் கோயிலில் 40 டன் எடையுள்ள கொடி மரம் கிரேனில் தூக்கியதால் உடைந்தது

திருமலை: ஆந்திரா குண்டூர் மாவட்டம், பிடுகுராலாவில் உள்ள பண்டிதவாரி பாளையம் கிராமத்தில் பழமையான கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் 40 டன் எடையுள்ள 44 அடி உயரமுள்ள கொடிமரம் கடந்த 1963ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பழமையான இந்த கொடிமரம் குதிகொண்ட பில்லம் மலையில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒற்றைக்கல்லால்  செய்யப்பட்டதாகும். பழமையான இந்த கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்து, கொடிமரத்தை தற்போதுள்ள நிலையில் இருந்து சிறிது தூரம் நகர்த்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, விஜயவாடாவில் இருந்து நேற்று முன்தினம் பொறியாளர்கள் அழைத்து வரப்பட்டனர். 2 கனரக கிரேன்களின் மூலம் கொடிமரத்தை நகர்த்த முயன்றபோது, அது இரண்டாக உடைந்து விழுந்தது. அப்போது, அதிர்ஷ்டவசமாக கொடிமரம் விழுந்த பகுதியில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.