Tamilnadu Local Body Election : தமிழக்தில் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திமுக சட்டமன்ற தேர்தலில் அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது. அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிட்டது.
அதே போல் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும், பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில், சட்டமன்றம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாஜக நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் பாஜக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அதன் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால், இரு கட்சியினரும் மாறி மாறி குறைகூறி வந்த நிலையில், முதல்முறையாக பாஜக தனித்து போட்டியிடுவதால், வெற்றி சதவீதம் எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை உட்பட பல தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்
தமிழக்தில் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திமுக சட்டமன்ற தேர்தலில் அமைத்து கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது. அதே சமயம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிட்டது.
அதே போல் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும், பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில், சட்டமன்றம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாஜக நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில் பாஜக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அதன் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால், இரு கட்சியினரும் மாறி மாறி குறைகூறி வந்த நிலையில், முதல்முறையாக பாஜக தனித்து போட்டியிடுவதால், வெற்றி சதவீதம் எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை உட்பட பல தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்
பலத்த பிரச்சார முடிக்கு பின்னர் கடந்த 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில், 57778 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வந்தது.
பலத்த பரபரப்புக்கு மத்தியில் பாஜகவின் வெற்றி குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக பாஜகவின் கோட்டை என்று சொல்லப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில், பாஜக பலமான வெற்றியை அறுவடை செய்ததா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் 52 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களை கொண்ட இந்த மாவட்டத்தில் தற்போது ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 99 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பாஜக சார்பில் 14 பேர் வெற்றி பெற்றுள்ள நிலையில், 828 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியில், 125 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜகவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்த்தில் சிறப்பாக வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாஜக 5 மாநகராட்சி உறுப்பினர்களையும், 46 நகராட்சி உறுப்பினர்களையும், 185 பேரூராட்சி உறுப்பிளனர்களையும் பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான இடங்கள் தென்தமிழகத்தில் பெற்ற வெற்றியாகும். இதில் மொத்த வெற்றியான 185 பேரூராட்சியில் 125 இடங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில இடங்களில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், பாஜகவின் வெற்றி இடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுறம் நராட்சியில் மொத்தம் உள்ள 20 இடங்களில், திமுக மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளும் தலா 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில். சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில், சுயே்சைகளில் ஆதரவு யாருக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் 6 சுயேச்சை வேட்பாளர்களில் 4 பேர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் மனநிலையில் உள்ளதால், நகராட்சி தலைவர் பதவியை பாஜக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், அதிமுக ஒரு மாநகராட்சி உறுப்பினர், 2 நகராட்சி உறுப்பினர் மற்றும் 57 பேரூராட்சி உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவியை வீழ்த்தியுள்ளது.