கோட்சேவின் பேத்தி நான்தான் என்று கூறி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள், மற்றும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி 144 வது வார்டில் கோட்சேவின் பேத்தி நான் தான் என்று கூறி பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 3,503 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 2695 வாக்குகளும் பெற்றுள்ளனர்.