புதுச்சேரி : கல்லுாரி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உயர்கல்வி குழுமத்தின் கீழ், ஒரு கல்வியியல் கல்லுாரி, நான்கு கலை அறிவியல் கல்லுாரிகள், இயங்கி வருகின்றன. இக்கல்லுாரி ஆசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.இதனை கண்டித்து, கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்பு நடத்தினர்.
இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை.இரண்டாம் கட்டமாக, நேற்று காலை 9.00 மணிக்கு அனைத்து கல்லுாரிகளிலும் வாயிற் கூட்டத்திற்காக திரண்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணித்து பாடம் நடத்தினர்.
இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லுாரி முன் நடந்த வாயிற்கூட்டத்திற்கு, உயர்கல்விக் குழும ஆசிரி யர் சங்க தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.அடுத்தகட்டமாக, வரும் 24ம் தேதி மாலை 5.௦௦ மணிக்கு உயர் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி : கல்லுாரி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் மற்றும் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி உயர்கல்வி குழுமத்தின் கீழ், ஒரு கல்வியியல் கல்லுாரி, நான்கு கலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.