கோவை மாநகராட்சி தேர்தலில், கட்சிப் பாகுபடின்றி பணம் விநியோகிக்கப்பட்டதாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில், வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் அனைத்து கட்சியினருக்கும் பாகுபாடில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், எனவே தேர்தலை ரத்து செய்து உத்தரவிடுமாறு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், பணப்பட்டுவாடா குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார் அவர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை இல்லை என உத்தரவிட்டது. அதேநேரம் தேர்தல் முடிவுகள் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும், பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: எந்தெந்த மாவட்டங்களில் முழுமையாக இன்று டாஸ்மாக் மூடல்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM