ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து அதனை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
2268/03 என்னும் இலக்கத்தை கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்சார விநியோகம், வைத்தியசாலைகளில் பராமரிப்பு பணிகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் இதற்கு நிகரான நோயாளிகளை பராமரிக்கும் சேவைகள், சிகிச்சை அளித்தல் சேவைகள் உள்ளிட்டன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.