தங்கம் விலை தொடர் ஏற்றம்.. இனி சாமானிய மக்கள் கனவில் தான் வாங்கணும் போல..?

ரஷ்யா -உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது.

இது தொடர்ந்து முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

அதெல்லாம் சரி தற்போதைய சந்தை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

உக்ரைனுக்குள் நுழையலாம்

உக்ரைனுக்குள் நுழையலாம்

ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இது சர்வதேச நாடுகளிடையே பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தொலைகாட்சி ஒன்றில் உரையாடிய அதிபர் புடின் உக்ரைன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வருகின்றது. ஆக நேட்டோ அமைப்பில் இணைவது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளது. மேலும் நேட்டோ அமைப்பு ரஷ்யாவின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளவில்லை என்றும் தனது உரையில் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

அதிகரிக்கும் பதற்றம்

அதிகரிக்கும் பதற்றம்

ரஷ்ய அதிபரின் இந்த உரையாடலுக்கு பிறகு உக்ரைனில் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகாங்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித் தனி நாடுகளாக அங்கீகரிப்பதாகவும் புடின் அறிவித்துள்ளார். மேலும் ரஷ்ய படைகள் இந்த இரு பகுதிகளிலும் அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார். ஆக உக்ரைனின் எல்லைக்குள் படைகள் குவிக்கப்படலாம் என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.

தொடர் ஏற்றத்தில் கச்சா எண்ணெய்
 

தொடர் ஏற்றத்தில் கச்சா எண்ணெய்

தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் சப்ளையில் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இது சர்வதேச நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தை வீழ்ச்சி

பத்திர சந்தை வீழ்ச்சி

கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து வலுவாக காணப்பட்ட நிலையில், 10 வருட பத்திர சந்தையானது சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் தங்கத்திற்கு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம்?

வட்டி விகிதம்?

இப்படி பல அரசியல் பதற்றங்களுக்கும் மத்தியிலும் தொடர்ந்து பணவீக்கமும் உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதன் காரணமாக வட்டி விகிதமானது விரைவில் அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், இது பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துமா? என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

காமெக்ஸ்  தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 11.10 டாலர்கள் அதிகரித்து, 1910.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 1% அதிகரித்து, 24.205 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 376 ரூபாய் அதிகரித்து, 50,454 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்சத்தினையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 809 ரூபாய் அதிகரித்து, 64,397 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 4,762 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 38,096 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 43 ரூபாய் அதிகரித்து, 5,200 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து, 41,600 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 90 பைசா அதிகரித்து, 69.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 691 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 69,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது தொடர்ந்து அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் அதிகரித்து காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on 22nd February 2022: gold prices near 9 month high amid ukraine crisis

gold price on 22nd February 2022: gold prices near 9 month high amid ukraine crisis/தங்கம் விலை தொடர் ஏற்றம்.. இனி சாமானிய மக்கள் கனவில் தான் வாங்கணும் போல..?

Story first published: Tuesday, February 22, 2022, 10:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.