அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டு வந்த சில வன்முறை தூண்டும் தகவல்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டன. தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர்.
உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதனால், அப்போதைய அதிபர் டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் தடை விதித்தன.
மெட்டா நிர்வாகி செய்த காரியம் – உடனடியாக வேலையை விட்டு தூக்கிய மார்க்!
ட்ரம்ப் கணக்கு முடக்கம்
டிரம்பின் பேஸ்புக் பக்க கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்னைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, அவரின் கணக்கிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று சமூக வலைத்தள நிறுவனங்கள் தெளிவாக விளக்கம் அளித்திருந்தது. இதனால் கோபம் அடைந்த ட்ரம்ப் தானே புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி வெளியிடுவேன் என்று உறுதி பூண்டார்.
சற்றும் தாமதிக்காமல் ட்ரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி குழுமம் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் ட்விட்டரைப் போலவே செயல்படக்கூடிய ‘ட்ரூத் சோஷியல்’ என்ற செயலியை உருவாக்கியது. சோதனைக் கட்டத்தில் இருந்த செயலியை குறித்து அப்போதே ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டார்.
ட்ரம்ப் தொடங்கிய ட்ரூத் சோசியல்
சுமார் 500 பீட்டா சோதனையாளர்கள் பங்கேற்று, ஆரம்ப நிலை பதிப்பை சோதனை செய்தனர். இந்நிலையில் தற்போது ‘Truth Social’ ஆப் ஐபோன் பயனர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இதை பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டது.
செயலி வெளியான 24 மணி நேரத்தில் ஆப் ஸ்டோரில் இது முதலிடத்தை பிடித்து பிற நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. டெக் ஜாம்பவான்களுக்கு விட்ட சவாலில் ட்ரம்ப் வெற்றி கண்டுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்களில் ஆண்ட்ராய்டு Play Store தளத்தில் இந்த செயலி பதிவேற்றப்பட உள்ளது.
பயனர்களின் பாதுகாப்புக்காக Twitter எடுத்த முடிவு… புதிதாக ‘Safety Mode’ அறிமுகம்!
Truth Social App-ஐ பயன்படுத்த, iOS 13 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் ஐபோன் தேவை. பயனர்களின் இலவச பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியின் அளவு 12.4MB ஆக உள்ளது.
ட்ரூத் சோஷியல் தளமானது பயனர்கள் அவர்கள் விரும்பும் வகையில் தங்களது பக்கத்தை வடிவமைத்துக்கொள்ளும் வசதியை வழங்குகிறது. மேலும் தேடல் வசதி மூலமாக நீங்கள் உங்களுக்கு விருப்பமான பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள், நபர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை பின் தொடருவதற்கான வசதியையும் அளிக்கிறது.
பிரபலங்களுடன் டேட்டிங் செய்ய ஒரு ஸ்பெஷல் ஆப்?