தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
தற்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி பெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 3வது வார்டில் பாமக வேட்பாளர் ரங்கநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் 4வது வார்டில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
குத்தாலம் பேரூராட்சியில் 4வது வார்டில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் 2 வார்டுகளில் பாமக வெற்றி பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் பேரூராட்சியில் 1 வார்டில் பாமக வெற்றி பெற்றுள்ளது.
‘
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 1 வார்டில் பாமக வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் 1 வார்டில் பாமக வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் 1 வார்டில் பாமக வெற்றி பெற்றுள்ளது.