Tamilnadu Local Body Elecyion Update : தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நகர்புற உள்ளட்சி தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான திமுக வழக்கம்போல சட்டமன்ற தேர்தல் கூட்டணியுடன் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. ஆனால் மறுபுறம் எதிர்கட்சியான அதிமுக கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக வெளியேறியது. அதில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தது.
ஆனால் தற்போது நடைபெற்றுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாஜக திடீரெ கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது அந்த வகையில திமுக கூட்டணி. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, தேமுதிக, உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்களுடன் சுயேச்சையான பல வேட்பாளர்கள் களமிறங்கினர்.
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு உட்பட் வார்டுகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக முன்னிலையில் இருந்தது. அதே நிலை தொடர்ந்து பல இடங்களில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.
இதில் குறிப்பாக சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் கோட்டையாக கருத்தப்பட்ட கோவை தொகுதியில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மேலும் உள்ளாட்சியில் அதிமுகவின் செல்வாகு மிகுந்த இடங்கள் பலவற்றியில் தற்போது திமுக வெற்றி வாகை சூடியுள்ளள நிலையில், அதன் கூட்டணி கட்சிகளும் கனிசமான வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாமக மற்றும் பாஜக என இரு கட்சிகளும், சுமாரான வெற்றிளை குவித்துள்ளது. அதிலும் பாஜக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. மற்ற கட்சிகள் அனைத்தும் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுளளன. இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதங்கள் எத்தனை என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இதில் முதலிடத்தில் ஆளும் கட்சியான திமுகவும், 2-ம் இடத்தில் எதிர்கட்சியான அதிமுகவும் உள்ளன. இதில் இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான வாக்கு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பாக ஒரு சில இடங்களில் அதிமுகவில் இருந்து பிரிந்த பாஜக, அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளது.