ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந்த நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்கு தயாராக இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் கிளர்ச்சியாளர்களை அதிகம் கொண்ட கிழக்கு எல்லை பகுதிகளான லுஹான்ஸ்க்(luhansk) மற்றும் டொனேட்ஸ்க்(donetsk) ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திங்கள்கிழமை அறிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி புதின் இந்த பகுதிகளை சுதந்திர பகுதிகளாக அறிவித்ததுடன், அப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ரஷ்ய ராணுவத்தையும் உதவுமாறு உத்தரவிட்டார்.
உக்ரைனின் இறையாண்மையை களங்கப்படுத்தும் இந்த செயலுக்கு பல நாடுகளும் தங்கள் எதிர்ப்பு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்த குறிப்பிட்ட இரண்டு பகுதிகளின் மீது பொருளாதார தடைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சிய் ரெஸ்னிக்கோவ் (oleksii reznikov) வெளிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மிகுந்த நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் தன்னை தற்காத்துக்கொள்ளவதற்காகவும், அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
The Kremlin did not recognize self-proclaimed «DPR/LPR» -Kremlin recognized its own aggression against 🇺🇦. We remain confident and calm. We are ready and able to defend ourselves and our sovereignty. World cannot be silent. Sanctions? Another brick in the wall? New Berlin Wall?
— Oleksii Reznikov (@oleksiireznikov) February 22, 2022
மேலும் அவர் சர்வதேச சமூகத்திடமிருந்து பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பை விடுத்ததுடன், ரஷ்யாவின் இந்த செயலால் உலகம் அமைதியாக இருக்கப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அவரின் மற்றொரு அறிவிப்பில், நம்முன் மிகப்பெரிய கடினமான சவால் உள்ளது, மேலும் நிறைய இழப்புகள் வரக்கூடும். நாம் நமது வலியைக் கடந்து செல்ல வேண்டும், பயம் மற்றும் விரக்தியைக் கடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.