நாட்டில் நாளாந்த எரிபொருள் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த டீசலுக்கான கேள்வி தற்போது 8,000 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல், 3,000 மெற்றிக் டொன்னாக இருந்த பெற்றோலுக்கான வாராந்த கேள்வி, 4,500 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இது ஒரு பாரதூரமான நிலை என்று சுட்டிக்காட்டிய அவர், இதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.