பக்தர்கள் சூழ்ந்திருந்தபோது துண்டாகி விழுந்த 40 டன் எடை கொண்ட கொடி மரம் – பதறவைத்த சம்பவம்
ஆந்திர மாநிலம் குண்டூரில் பக்தர்கள் முன்னிலையில், பழமையான ராமர் கோவில் முன்பு இருந்த 40 டன் எடை கொண்ட கொடி மரத்தை, வேறு இடத்திற்கு மாற்றி வைக்க முயற்சிசெய்தபோது, கொடி மரம் துண்டாகி கீழே விழுந்த காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டிதிவாரி பாலம் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள பழமையான ராமர் கோவில் முன்பு, 40 டன் எடையுள்ள 44 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆன கொடி மரம் ஒன்று இருந்தது. கடந்த 1963-ல் அமைக்கப்பட்டதால் அந்த கொடி மரம் பழசாகியிருந்தது. இதையடுத்து புதிதாக கொடி மரம் வைப்பதற்காக அந்த பழைய கொடி மரம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
image
ராட்சத கிரேன் உதவியுடன் இந்த கொடிமரம் மாற்றும் நிகழ்ச்சியில், ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், பழைய கொடி மரத்தை தூக்கியபோது திடீரென்று, கொடி மரத்தின் மேல் பகுதி உடைந்து, அதன் பெரியத் துண்டுஇ தரையில் பக்தர்கள் எதிர்பாராத நேரத்தில் விழுந்தது. கொடிமரம் இடிந்து விழுந்தபோது, அதை சுற்றி நின்ற பக்தர்கள்இ அங்கிருந்து தப்பித்து ஓடியதால், அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#AndhraPradesh: Miraculous escape for people as Dwajasthambham collapses during restoration at Ramalayam in Piduguralla, #Guntur #AndhraPradesh. @NewsMeter_In @CoreenaSuares2 pic.twitter.com/olAqERAcMx
— SriLakshmi Muttevi (@SriLakshmi_10) February 22, 2022
Leave a Comment
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.