ஒவ்கடங்கு:
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. அந்நாட்டின் பாம்புளோரா என்ற இடத்தில் தங்கச்சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த தங்கச்சுரங்கத்தில் ஊழியர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தங்கச்சுரங்கம் அருகே திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 59 பேர் பரிதாபமாக பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில், அந்த இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தை சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. வெடிவிபத்து குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்…உக்ரைன், ரஷியா செல்லும் விமானங்கள் ரத்து- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு