அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல பாராளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன.
இதற்கமைவாக இன்று (22) வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழு, விவசாய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன.
நாளை (23) தொழில் அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன.
இதேவேளை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கூட்டமும் இன்று (22) நடைபெறவுள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு நாளை மறுதினம் 24 ஆம் திகதி கூடவுள்ளது.