இந்தியா வரலாற்றிலேயே எல்ஐசி (LIC ) பொது பங்கு வெளியீடானது மிகப்பெரிய அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் LIC பங்கு வெளியீடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இது குறித்து ஒரு தரப்பு எல்ஐசி பங்கு வெளியீடானது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கின்றது. எனினும் ஒரு தரப்பு தங்க முட்டையிடும் வாத்தினை அரசு விற்பனை செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை செபியிடம் சமர்பித்த வரைவில், எல்ஐசயின் 5% பங்குகள் அல்லது 31.6 பங்குகள் மட்டுமே அரசு விற்பனை செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் இத்தகைய பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.
சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..!

அதிகளவிலான முதலீடுகள்
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் எல்ஐசி, குறித்தான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இன்று அப்படி வெளியான ஒரு அறிக்கை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
ஐபிஓ(IPO)-வுக்கு வெளியாக விருக்கும் நிலையில், எல்ஐசி நிறுவனம் அரசு பத்திரங்கள், ஈக்விட்டி சந்தைகள், சேமிப்புகள் என பலவற்றிலும் அதிகளவிலான முதலீடுகள் செய்துள்ளதை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

முக்கிய பங்கு
எல்ஐசி நிறுவனம் அரசு பத்திரங்களில் மட்டும் தனியாக 19% பங்கினை தன் வசம் வைத்துள்ளது. அதோடு, மிகப் பெரிய ஃபண்ட் மேனேஜராகவும், சேமிப்புகளிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதே 2061ல் முதிர்வடையும் அரசு பத்திரங்களில் 80.7 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பினை உடைய, 17% பங்கினை வைத்து இரண்டாவது இடத்தில் ரிசர்வ் வங்கியும் உள்ளது.

சுவிஸ் தரவு?
அதோடு பொதுத் துறை வங்கிகள் தலைமையில் வணிக வங்கிகள் என கூட்டாக சேர்த்து 40% தங்கள் வசம் வைத்துள்ளன. மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 5% மட்டுமே வைத்துள்ளன.
சுவிஸ் தரவின் ( Swiss brokerage UBS Securities) படி, அரசு பத்திரங்களில் 2019ல் 20.6%மும், 2020 மார்ச்சில் 20.5% அரசு பத்திரங்களும் கைவசம் எல்ஐசி வைத்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.

ஈக்விட்டி & AUM
பத்திர சந்தை மட்டும் அல்ல, ஈக்விட்டி சந்தையிலும் எல்ஐசி-யின் பங்கு மிகப்பெரியது. எல்ஐசி நிர்வாகத்தின் (AUM) கீழ் 520 பில்லியன் டாலர் மதிப்பும், உள்நாட்டு ஈக்விட்டி சந்தையில் நிறுவன முதலீட்டாளராக 3 டிரில்லியன் டாலர் மதிப்பிலும் பங்குகளை வைத்துள்ளது.

ஈக்விட்டிகளில் அதிகம்
எல்ஐசி தனி ஒரு நிறுவனமாக ஈக்விட்டிகளில் சுமார் 4% பங்கினை கொண்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு பிறகு மிகப்பெரிய புரோமோட்டராக எல்ஐசி உள்ளது. ஆனால் இது கடந்த 2017ல் 4.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல பொதுத்துறை நிறுவனங்களிலும் எல்ஐசி-யின் பங்கு விகிதம் சுமார் 9% கொண்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் முதலீடு
டிசம்பர் நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீஸ் நிறுவனத்தின் 10% பங்கினையும், டிசிஎஸ் நிறுவனத்தின் 5% பங்கினையும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 5% பங்கினையும், ஐடிசி நிறுவனத்தின் 5% பங்கும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எல் & டி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கிகளில் 4% பங்கினையும் வைத்துள்ளது.

சேமிப்புகள்
எல்ஐசி-யில் தற்போது சுமார் 28 கோடி பாலிதாரர்கள் உள்ளனர். இன்சூரன்ஸ் துறையில் இன்றும் மிகப்பெரிய பங்கினை கொண்ட இந்த நிறுவனம், மக்களின் சேமிப்புகளை அதிகம் முதலீடு செய்யும் ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது.
LIC IPO: LIC biggest holder of Gsec, equities, savings
LIC IPO: LIC biggest holder of Gsec, equities, savings/பிரமிக்க வைக்கும் அறிக்கை.. அரசு பத்திரங்கள், ஈக்விட்டிகள், சேமிப்பு எல்லாவற்றிலும் LIC தான் டாப்!