ஜூனியா : அமெரிக்காவில், பெரிய அளவிலான ‘ஓப்பல்’ எனப்படும் ரத்தின கல், 93 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த பிரெட் வோன் பிரான்ட், அரிய வகை ரத்தின கற்களுக்காக, சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இவரின் தந்தை கை வோன் பிரான்ட், 1950ல் ஆஸ்திரேலியாவைசுபு சேர்ந்த ஓப்பல் வியாபாரி ஜான் ஆல்மேனிடம் இருந்து, பெரிய ஓப்பல் கல் ஒன்றை வாங்கினார். விலை உயர்ந்த கல் என்பதால், அதை பல ஆண்டுகளாக, ‘லாக்கரில்’ வைத்து பாதுகாத்து வந்தார்.
கை வோன் பிரான்ட் மறைவுக்குப் பின், அந்த கல், மகன் பிரெட் வோன் பிரான்ட் வசம் வந்தது.எடை 2.36 கிலோ உள்ள இந்த ஓப்பல் கல்லை விற்க முடிவு செய்த பிரெட், ஏலம் விடும் நிறுவனத்திடம் தந்தார். இதையடுத்து, இதற்கான ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஓப்பல் கல்லை வாங்க, பலரும் போட்டி போட்டு ஏலத்தில் பங்கேற்றனர். கடைசியாக அந்த கல், 93 லட்சத்து 10 ஆயிரத்து 275 ரூபாய்க்கு ஏலத்தில் போனது.
ஜூனியா : அமெரிக்காவில், பெரிய அளவிலான ‘ஓப்பல்’ எனப்படும் ரத்தின கல், 93 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த பிரெட் வோன் பிரான்ட், அரிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.