கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில சர்ச்சைக்குரிய அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சில சமூக ஊடங்கள் அவரது கணக்கிற்கு தடை விதித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாக செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவரது டிரம்ப் மீடியா & டெக்னாலஜி க்ரூப் உடன் இணைந்து நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தார். தற்போது இவரின் புதிய முயற்சியான ‘ட்ரூத் சோஷியல்’ செயலியை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆப்பிள் ஆப் ஸ்டோரில் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க | Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா
ஏற்கனவே இந்த செயலியை ஆர்டர் செய்த பயனர்களுக்கு அவர்களின் சாதனங்களில் இந்த செயலி தானாகவே பதிவிறக்கப்பட்டது, மேலும் சில பயனர்களுக்கு இந்த செயலி கிடைக்கவில்லை. இந்நிலையில் நிறுவனம் அதிகமான தேவை இருப்பதன் காரணமாக உங்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளோம் விரைவில் எங்கள் செயலி உங்கள் சாதனங்களில் செயல்பட தொடங்கு என்ற செய்தியை பயனர்களுக்கு அனுப்பியது. மேலும் இந்த செயலி ட்விட்டரை போன்ற அம்ஸங்களை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் நாங்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வர தொடங்கியுள்ளோம், இதன்மூலம் நாங்கள் பல மக்களுக்கு சிறந்த தளம் அமைத்து கொடுக்க போகிறோம் என்று நியூன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மார்ச் மாதத்திற்குள் அனைத்து நபர்களுக்கும் இந்த செயலியின் பயன்பாடு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்வோம் என்று கூறினார். இவர் பயனர்களை அதிக அக்கவுண்டுகளை பின்தொடரவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரவும் மற்றும் சாட் செய்யவும் வலியுறுத்தினார். மேலும் இந்த செயலி குறித்த முழுமையான மற்றும் உண்மையான விவரங்கள் தெரியவில்லை, உதாரணமாக நிறுவனம் வளர்ச்சிக்கு எவ்வாறு நிதியளிக்கிறது என்பது குறித்த தகவல் இல்லை.
மேலும் படிக்க | Tech Tips: மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன!