இம்பால்,
மணிப்பூர் மாநிலம் ஹீங்காங்கில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
கடந்த மாதம் மணிப்பூர் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த பல ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பல அரசாங்கங்களை கண்டுள்ளது. பல வருடங்கள் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, மணிப்பூரில் சமத்துவமின்மை மட்டுமே இருந்தது.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், பாஜகவின் இரட்டை இயந்திர அரசு, மணிப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி உழைத்தது. பாஜகவின் நல்லாட்சியையும், நல்ல நோக்கத்தையும் பார்த்திருப்பீர்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் நல்லாட்சியால், அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.
மணிப்பூரின் அடுத்த 25 ஆண்டுகளை இப்போது நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் தீர்மானிக்கும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசால் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட் நிலைத்தன்மை மற்றும் அமைதி ஆகியவற்றை நீடித்து நிலைக்க செய்ய வேண்டும். அதற்கு முழு பெரும்பான்மை பெற்ற பாஜக அரசு அமைய வேண்டியது அவசியம்.
பாஜக அரசு செய்து காட்ட இயலாத விஷயங்களை செய்து காட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி மணிப்பூரின் முன்னேற்றத்துக்கான விஷயங்களில் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை. ஆனால், நாங்கள் சென்னதை செய்தோம்.
மியான்மர்- தாய்லாந்து இடையேயான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டவுடன், மணிப்பூர் கிழக்கு ஆசியாவின் முக்கிய பகுதியாக உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.