ரஷ்யா மனித உயிர்களுடன் விளையாடுவதாக குற்றம் சாட்டியுள்ளது ஜேர்மனி.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, ரஷ்யா, உக்ரைனில் வாழும் பொதுமக்களின் உயிர்களுடன் பொறுப்பற்ற முறையில் விளையாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், உடனடியாக அது பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தான் அவசரமாக ரஷ்ய அரசுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, மனித உயிர்களுடன் விளையாடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
பிரஸ்ஸல்சில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ஒன்றிற்காக வந்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 72 மணி நேரத்தில் நாம் பார்த்துள்ள தாக்குதல்கள் கவலையை ஏற்படுத்துகின்றன என்று கூறிய அவர், இதற்கு ரஷ்ய அரசுதான் பொறுப்பு. ஆகவேதான் நான் அவரசமாக ரஷ்ய அரசை அழைக்கிறேன்: ’பேச்சு வார்த்தைக்கு வாருங்கள், எல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது’ என்றார்.