'முட்டாள்தனம்!' – ரஷ்யாவை கடுமையாக சாடிய அமெரிக்கா!

உக்ரைன் எல்லையில் அமைதிக் குழு என்ற பெயரில், ரஷ்யா படைகளை குவித்துள்ளதை முட்டாள்தனமான நடவடிக்கை என அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டின் போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும்.

ஆனால், எல்லைப் பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் எல்லையில் ஏராளமான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. தனது ராணுவத்தின் ஒரு பகுதியை முகாம்களுக்கு திரும்ப அழைத்துக் கொண்டதாக ரஷ்யா கூறினாலும், உக்ரைன் எல்லையில் பல லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

சர்வதேச விமான சேவை தொடங்குவது எப்போது? – வெளியான புது தகவல்!

இதற்கிடையே, உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில், ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீரிக்குமாறு விளாடிமிர் புதினை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அவர், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார்.

இதன் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, உக்ரைன் மெக்சிகோ மற்றும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று தொடங்கியது. இதில் பேசிய ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு, கிழக்கு உக்ரைனில் அமைதி காக்கும் நடவடிக்கை என்று ரஷ்யா அழைக்கும் நடவடிக்கை முட்டாள்தனமானது என்றும், உக்ரைனில் இருந்து பிரிந்த பகுதிகளை சுதந்திர நாடாக மாஸ்கோ அங்கீகரிப்பது போருக்கான அதன் சாக்குப்போக்கின் ஒரு பகுதி என்றும் தெரிவித்தார்.

உக்ரைன் விவகாரம்: புடினை சந்திக்க ஓகே சொன்ன ஜோ பைடன்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ்
திருமூர்த்தி
கூறியதாவது:

ரஷ்யா – உக்ரைன் இடையே பதற்றம் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டும். ராணுவ விரிவாக்கத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றமான சூழ்நிலையால், பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு அவசியம். 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட பலர், உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முன்னுரிமை. விரைவில் ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.