சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக குமரி பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. அதே வேளையில் குமரி மாவட்டம் இரணியல் மற்றும் மண்டைக்காடு பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு 19ந்தேதி நடைபெற்று முடிவடைந் தது. இதையடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் மாநிலம் முழுவதும 268 மையங்களில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. ஆளுங்கட்சியான திமுக இதுவரை 155 மாநகராட்சி, 85 நகராட்சி, 593 பேரூராட்சி வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 மாநகராட்சி, 23 நகராட்சி மற்றும் 136 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சி மற்றும் பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் 18 பேரூராட்சி வார்டுகளில் 11 வார்டுகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக 9 இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. கு
குமரி மாவட்டத்தில் முதன்முறையாக கப்பியறை பேரூராட்சி திமுக கைப்பற்றியது. இங்குள்ள 1-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆன்சி சோபா ராணி வெற்றி பெற்றுள்ளார். மற்ற அனைத்தையும் திமுக கைப்பற்றி உள்ளது.
இரணியல் பேரூராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. அங்குள்ள 15 வார்டுகளில் பாஜக 12 இடங்களை கைப்பற்றி உள்ளது. சுயேச்சை 2 இடங்களையும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றி உள்ளது.
இங்கு திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றிபெறவில்லை.
இதேபோல் மண்டைக்காடு பேரூராட்சியையும் பாஜக கைப்பற்றியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய 4 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 21வது வார்டில், திமுக முன்னாள் அமைச்சர் நாராயணசாமியின் பேத்தி மீனாட்சி சூரியபிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 20ல் திமுக, மதிமுக மற்றும் அதிமுக தலா 1 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.