தமிழ் திரையுலகின் அதிகாரமிக்க தயாரிப்பாளர்களில் ஒருவரான அன்புச்செழியனின் அன்பு மகள் சுஷ்மிதாவின் திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருவிழா போன்று நடந்த அந்த திருமணத்தில்
ரஜினிகாந்த்
, கமல் ஹாசன், பிரபு, தயாரிப்பாளர் போனி கபூர் என்று திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
அன்புச்செழியன்
வீட்டு விசேஷத்தில்
தனுஷ்
கலந்து கொள்ளவில்லை. அவர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதால் திருமணத்திற்கு வரவில்லையாம்.
அதே சமயம், தற்போது திருமணத்திற்கு வந்தால் ஐஸ்வர்யா பற்றி கேட்பார்கள். மேலும் ரஜினியை சந்திக்க வேண்டியிருக்கும். முக்கியமாக ரஜினியை சந்திப்பதை தவிர்க்கவே தனுஷ் ஹைதராபாத்திலேயே இருந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்த சந்தோஷமே தனி: மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினி
ரஜினியை தவிர்க்க தன் படத்தை தயாரித்தவரின் வீட்டு விசேஷத்தை தவிர்த்து ரிஸ்க் எடுத்திருக்கிறார் தனுஷ்.
முன்னதாக தனுஷுக்கு போன் செய்து மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழுமாறு கூறினாராம் ரஜினி. ஆனால் தனுஷோ அதற்கு பதில் அளிக்கவில்லையாம். மாறாக தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தாராம்.
எந்த வீட்டில் தான் பிரச்சனை இல்ல மாப்ள, பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழப் பாருங்கள் என்று அறிவுரை வழங்கினாராம் ரஜினி.