பொதுவாக பங்கு சந்தைகளில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் கூறுவதுண்டு. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை. வாருங்கள் பார்க்கலாம்.
நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கு ஜிஆர்எம் ஓவர்சீஸ் (GRM Overseas). இந்த பங்கானது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3455% ஏற்றத்தினைக் கண்டுள்ளது.
இந்த ஸ்மால் கேப் பங்கின் விலையானது பிப்ரவரி 21,2019 அன்று 14.99 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இந்த நாடுகளில் 4 நாள் மட்டுமே வேலை, 3 நாட்கள் விடுமுறை.. இந்தியாவில் எப்போது..!
பல லட்சம் லாபம்
ஆனால் இன்று அதன் விலை 532.95 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார் இன்று அதன் மதிப்பானது 35 லட்சம் ரூபாய்க்கு மேல். இதே காலகட்டத்தில் 58.34% ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இன்று இந்த பங்கின் விலையானது தொடக்கத்திலேயே 4.99% சரிவில் தான் காணப்படுகின்றது. லோவர் சர்க்யூட் ஆகியுள்ளது. கடந்த 4 அமர்வுகளில் மட்டும் இந்த பங்கின் விலையானது 18% சரிவினைக் கண்டுள்ளது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
இந்த பங்கின் விலையானது 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் மேலாக காணப்படுகின்றது. எனினும் 5 நாள், 20 நாள் மற்றும் 50 நாள் மூவிங் ஆவர்ஜ்ஜீக்கும் கீழாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓராண்டு நிலவரம்
கடந்த ஓராண்டில் இந்த பங்கின் விலையானது 837.26% ஏற்றத்தினையே கண்டுள்ளது. எனினும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 16.53% சரிவில் தான் காணப்படுகின்றது. கடந்த ஓரு மாதத்தில் இப்பங்கின் விலையானது 38.39% சரிவினையும், 17.94% இழப்பினையும் கண்டுள்ளது.
பங்குகள் விகிதம்
இந்த நிறுவனத்தில் புரோமோட்டர்கள் 72% பங்கினையும், 12,793 பொது பங்குதாரர்கள் 28% பங்கினையும் டிசம்பர் 2021 நிலவரப்படி வைத்துள்ளது. இதில் 12,511 பொது பங்குதாரர்கள் 2 லட்சம் ரூபாய் வரையில் மூலதனத்தினை கொண்டுள்ளனர். இதே இரண்டு அன்னிய முதலீட்டாளர்கள் 21, 635 பங்குகளையும் வைத்துள்ளனர்.
போட்டியாளர்கள்
ஜிஆர்எம் நிறுவனத்தின் போட்டியாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் பங்கு சந்தை வருவாய் அடிப்படையில் அதன் சக நிறுவனங்களை விஞ்சியுள்ளது. இது KRBL நிறுவனம் 37.8% சரிவினைக் கண்டுள்ளது.
LT ஃபுட்ஸ் 88.7% ஏற்றத்திலும், சமன்லால் செட்டியாவின் பங்கு இந்த காலகட்டத்தில் 24.19% ஏற்றத்தினைக் கண்டுள்ளது.
லாபம் எப்படி?
டிசம்பர் காலாண்டு நிலவரப்படி இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 350% அதிகரித்து, 26.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 5.92 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் 24.47 கோடி ரூபாயாக இருந்தது.
இதே விற்பனை விகிதமானது 39% அதிகரித்து, 296.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 213.47 கோடி ரூபாயாக இருந்தது. இது செயல்பாட்டு லாபம் 100% அதிகரித்து, 23.24 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 11.57 கோடி ரூபாயாக இருந்தது.
விற்பனை
கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை விகிதமானது 799.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மார்ச் 2020வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 777.15 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த 2019ம் நிதியாண்டில் 1109.05 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் என்ன செய்கிறது?
ஜிஆர்சிம் ஓவர்சீஸ் நிறுவனம் இந்தியாவினை தலைமையகமாக கொண்ட ஒரு அரிசி வணிகம் செய்யும் நிறுவனமாகும். இது சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு அரிசி பொருட்களை உற்பத்தி செய்கிறது. பாரம்பரிய பாசுமதி அரிசி, சூப்பர் பாசுமதி அரிசி, இந்தியன் 1121 சூப்பர் அரிசி, ஷர்பதி அரிசி, சுகந்தா அரிசி உள்ளிட்ட பல வகையான அரிசிகளும் லிஸ்டில் அடங்கும்.
Rs.15 to Rs.533: this small Cap stock turned into a multibagger in 3 years
Rs.15 to Rs.533: this small Cap stock turned into a multibagger in 3 years/ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?