புதுடெல்லி: அமைப்புசார் துறைகளில் ஒருவர் பணிக்குச் சேரும்போது அவரது அடிப்படை ஊதியம்ரூ.15000-க்கு கீழ் இருந்தால், அவர் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ் 95) கீழ் வருவார்.
அதன்படி அவரது ஊதியத்தில் இருந்து 8.33 சதவீதத்தை ஓய்வூதியத்துக்கென்று அவரது நிறுவனம் செலுத்தும். ரூ.15,000-க்குமேல் அடிப்படை ஊதியம் பெறும்ஊழியர்களில் சிலரும் வருங்கால வைப்பு நிதி அலுவலக (இபிஎப்ஓ) உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கும் 8.33சதவீதம் ஓய்வூதியத்துக்கு ஓதுக்கப்படுகிறது.
இந்தத் தொகையை உயர்த்தவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்நிலையில், தற்போது ரூ.15000-க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுவோருக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர பிஎப் அலுவலகம் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து வரும் மார்ச்மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் குவாஹாட்டி நகரில் நடக்கவிருக்கும் மத்திய அறங்காவலர்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
– பிடிஐ