வாட்ஸ் ஆப் எமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை| Dinamalar

ரியாத் : ‘வாட்ஸ் ஆப்’ செயலியில் உள்ள, ‘எமோஜி’யை பிறருக்கு அனுப்பும் நபர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டம், சவுதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், பெரும்பாலான மக்கள், ‘வாட்ஸ் ஆப்’ செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில், ‘எமோஜி’ எனப்படும் சிறிய அளவிலான ‘கார்ட்டூன்’களை, பிறருக்கு பகிரும் வசதி உள்ளது. இந்நிலையில், எமோஜியை பிறருக்கு பகிரும் நபர்களுக்கு, சிறை தண்டனை வழங்க சவுதியில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மோசடி தடுப்பு சங்கத்தின் உறுப்பினர் அல் மோவாதாஜ் குத்பி நேற்று கூறியதாவது: வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள, ‘சிவப்பு இதய எமோஜி’யை, யாரும் பிறருக்கு பகிரக்கூடாது. பகிர்ந்தால், எமோஜியை பெறும் நபர்கள், அதை அனுப்பியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், புதிய சட்டத்தின்படி, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். அதனுடன், 19 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.இந்த தவறை மீண்டும் செய்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 59 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.