விஜய் டி.வி சீரியலில் கலக்கும் ஹேமலதா: பாட்ஷாவில் குழந்தையா வந்த இவங்கள ஞாபகம் இருக்கா?

Tamil Serial Actress Hemalatha Update : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் மாஸ்டர் ஹிட் படமான பாட்சா படத்தில் வில்லன் ரகுவரனின் மகளாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஹேமலாதா. பூவே உனக்காக, சூரியவம்சம் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், காதல் கொண்டேன் மதுர, ஜி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான அடைக்கலம் படத்தில் நடித்திரந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனக் கலைஞராகவும் அறியப்பட்ட ஹேமலதா கடந்த 1999-ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகாவின் ஹிட் தொடர் சித்தி சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலில் காவேரி என்ற கேரக்டரில் வந்த இவர் பலரின் பாராட்டுக்களை பெற்றார். அதன்பிறகு மனைவி என்ற தொடரில் நடித்த இவர், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் ராகவி என்ற கேரக்ரில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

விஜய் டிவியின் பிரபலமான தொடரான கனா காணும் காலங்கள் தொடர் 2 சீசன்கள் முடிந்த போது 3-வது சீசனாக கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற பெயரில் ஒளிபரப்பானது. கல்லூரி மாணவர்களின் வாழ்வியலை மையமாக கொண்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சன்டிவியின மகள், விஜய் டிவியின் அன்பே வா தொடரில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவரை மக்கள் மத்தியில் கொண்ட சென்ற மற்றொரு சீரியல் தென்றல். இந்த சீரியலில், தீபா பிரபாகர் கேரக்டரில் நடித்த இவருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. தீபக் தினகர் மற்றும் ஸ்ருதி ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியல், கல்வி மற்றும் நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் சவால்களை சுற்றி வருகிறது.

இது விகடன் டெலிவிஸ்டாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த சீரியல் தமிழ் பொழுதுபோக்கு துறையில் பல விருதுகளையும் பெற்றுள்ளது. மேலும் இவர் நடித்த சித்தி தொடர் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பிராந்திய மொழி தொலைக்காட்சி சீரியல் என்ற சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை வெளியிட்டு வருகிறார் அவ்வாறு இவர் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.