விருதுநகர்: காலை 9 மணி நிலவரப்படி, விருதுநகர் நகராட்சியில் 7 வார்டுகளில் திமுகவும், அதிமுக, காங்கிரஸ், அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
விருதுநகர் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 43 வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், விருதுநகர் நகராட்சியில் 1, 2, 4, 5, 7, 9,10 வது வார்டுகளில் திமுகவும், 3-வது வார்டில் அதிமுகவும், 8-வது வார்டில் காங்கிரசும், 6வது வார்டில் அமமுகவும் வெற்றி வெற்றி பெற்றுள்ளன. 6-வது வார்டில் அமமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
இதில் 1-வது வார்டில் அதிமுகவும், 2-வது வார்டில் திமுகவும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருந்தன. 3-வது வார்டில் அதிமுக இரண்டு ஓட்டுகளும் திமுக ஒரு ஓட்டும் பெற்றிருந்தன. 4-வது வார்டில் அதிமுக மற்றும் திமுக தலா ஒரு ஓட்டும், 5வது வார்டில் திமுக, பாஜக ஒரு ஓட்டும் பெற்றிருந்தன. 6-வது வார்டில் அதிமுக இரண்டு ஓட்டுக்களையும் பெற்றிருந்தன.தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அசாம்பவித சம்பவங்களைத் தவிர்க்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.