பெருகி வரும் சமூக வலைதளங்களால், முன்பை விட பயனர்களிடையே புகைப்படங்களின் மீது மோகம் அதிகரித்துள்ளது. இப்போதெல்லாம் பயனர்கள் நல்ல கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனை தான் வாங்க விரும்புகிறார்கள். எனவே, பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மொபைலை அறிமுகப்படுத்தும் போது முக்கியமாக நல்ல கேமராவை வழங்குகின்றன. தற்போது, மக்கள் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றில் ஆர்வமாக உள்ளனர்.
இதனால்தான் நிறுவனங்களும் போன்களில் நல்ல தரமான கேமராக்களை வழங்க முயற்சிக்கின்றன. Samsung, Realme போன்ற நிறுவனங்கள் Mid Range போன்களில் சிறந்த கேமராக்களை வழங்குகின்றன. 108 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் வரும் பல சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்கள் சந்தையில் உள்ளன. நீங்கள் நல்ல தரமான கேமராவுடன் வரும் போனையும் தேடுகிறீர்கள் என்றால், இந்த விருப்பங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த விருப்பப் பட்டியலில் Realme 8 Pro, Moto G60 போன்ற ஸ்மார்ட்போன்களும் அடங்கும்.
50MP சோனி OIS கேமரா… வெளியானது Realme 9 Pro Plus 5G சூப்பர் கேமரா மொபைல்!
Motorola Edge 20 Fusion
மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது. இதில் 6.67″ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கேமராவில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்காக 32 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. Motorola Edge 20 Fusion ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இதன் விலை ரூ.21,499ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?
Mi 11i Series
மி 11ஐ ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6.67″ டிஸ்ப்ளே உள்ளது. Mi 11i மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புக்காக 16 மெகாபிக்சல் கேமராவை மி 11ஐ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Mi 11i 5160mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது. Flipkart ஷாப்பிங் தளத்தில் 5G ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999ஆக உள்ளது.
Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!
Redmi Note 10 Pro Max
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் முதன்மை கேமரா 108 மெகாபிக்சல் லென்ஸ் உடன் வருகிறது. செல்பி, வீடியோ அழைப்புக்காக 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5010mAh திறன் கொண்ட பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
Flipkart Mobile
shopping தளத்தில் Redmi Note 10 Pro Max ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,875ஆக உள்ளது.
Infinix zero 5g: முதல் 5ஜி போனில் இன்பினிக்ஸ் சொதப்பியது என்ன?
Realme 8 pro
ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் உடன் 128ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.4″ அங்குல தொடுதிரை கொடுக்கப்பட்டுள்ளது. Realme 8 Pro ஸ்மார்ட்போனில் டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதிலும், 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 16 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4500mAh பேட்டரி திறனைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் சக்தியூட்டப்பட்டுள்ளது. Flipkart Shopping தளத்தில் இந்த Realme 8 Pro போனின் விலை ரூ.17,999ஆக விற்கப்படுகிறது.
Moto G 60
மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி Internal Storage வழங்கப்படுகிறது. இதில் பெரிய 6.8″ அங்குல முழு அளவு எச்டி+ திரை கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் டிரிப்பிள் கேமரா அமைப்பை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அதில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி எடுக்க பெரிய 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய 6000mAh திறன் கொண்ட பேட்டரி கொண்டு ஸ்மார்ட்போன் சக்தியூட்டப்பட்டுள்ளது. Moto G60 ஸ்மார்ட்போனில் விலை ரூ.17,999ஆக பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது போனா… இல்ல சினிமா கேமராவா… 40MP செல்பி, 2 டெலிபோட்டோ லென்ஸுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா!
Samsung Galaxy S20 Ultra
கடைசியா பிரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா போனிலும் திறன்வாய்ந்த 108 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 128 GB இன்டெர்னல் மெமரி மற்றும் 12GB RAM உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இதில் 6.9″ அங்குல சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,999ஆக உள்ளது.
Also Read:
5ஜி மொபைல் ரூ.15,000க்கும் கீழ்… இதுல உங்களுக்கு புடிச்சது எது?வெறும் ரூ.8,999 விலையில் தொடங்கும் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள்!Jio Phone 5g: மிகக் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்… ஜியோவின் கனவு நனவாகுமா!