புதுடெல்லி:
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக அந்நாட்டு எல்லையில் ரஷ்யா போர் படைகளை குவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார். இதற்கு உடனடியான எவ்வித பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.
ரஷ்யா, உக்ரைன் இடையே எந்நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் பல நாடுகள் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை நாடு திரும்ப கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய அரசு உக்ரைனுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்றை அனுப்பியது. அதில், மாணவர்கள், குடிமகன்கள் உள்பட 242 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் உக்ரைனில் இருந்து டெல்லிக்கு இன்று புறப்பட்டது.
இந்நிலையில், அந்த விமானம் இரவு 12 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதையும் படியுங்கள்…இமாசலபிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி- 12 பேர் படுகாயம்