மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) அளவீட்டை கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு அடுத்தடுத்து மத்திய அரசு உயர்த்திய வந்த நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. மத்திய அரசின் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது.
இதனால் மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 18 மாதத்திற்கு அகவிலைப்படியை (DA) பெற்ற காத்திருக்கின்றனர். இந்த அரியர் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்துத் தற்போது சில தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி நிலுவைத் தொகை
ஒருபக்கம் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சாதகமாக அறிவிப்பாக 18 மாத அரியர் அகவிலைப்படி தொகை ஹோலி பண்டிகைக்கு முன்பு அதாவது மார்ச் 18ஆம் தேதிக்குள் அளிக்கப்படும் என்றும், இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் மாத சம்பளத்தில் அகவிலைப்படி மூலம் மிகப்பெரிய தொகையைச் சம்பளமாகப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பிரச்சனை உண்டு….
லெவல்-1 ஊழியர்கள்
கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் (JCM) தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையைக் கணக்கிடும் போது, லெவல்-1 பிரிவில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது.
லெவல்-14 ஊழியர்கள்
இதேபோல் 7வது சம்பள கமிஷன் படி அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900 கொண்ட லெவல்-13 மற்றும் லெவல்-14 பிரிவில் இகுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 ஆக உள்ளது.
31 சதவீத அகவிலைப்படி
இந்த நிலுவை தொகை அக்டோபர் மாதம் மத்திய அரசு அகவிலைப்படி அளவை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தியுள்ளதன் மூலம் கூடுதலான சுமை அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த நிலுவை தொகை 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
கோரிக்கை
இந்நிலையில் மத்திய அரசிடம் அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கக் கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் (JCM) தேசிய கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.
மத்திய அரசின் நிலை
மத்திய அரசு ஏற்கனவே நிதி நெருக்கடி, பணவீக்க உயர்வு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போதைய நிலையில் மத்திய அரசால் அகவிலைப்படியின் 18 மாத நிலுவைத் தொகையை அளிக்க முடியாது எனத் தெரிகிறது. இது மத்திய அரசு ஊழியர்களுக்குச் சோகமாகச் செய்தியாக அமைந்துள்ளது.
48 lakh central government employees sadden on 18-month DA arrears may delay
48 lakh central government employees sadden on 18-month DA arrears may delay 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சோகம்.. 18 மாத DA நிலுவை பெறுவதில் தாமதம்..!