கொரோனா தொற்றுக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பல சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்ட சலுகை வழங்கியது மட்டும் அல்லாமல், ரத்து செய்யப்பட்ட காலத்திற்கு நஷ்ட ஈடாகவும் DA அளவீட்டைப் பெரிய அளவில் அதிகரித்தது
இந்நிலையில் மத்திய அரசு, மீண்டும் அரசு ஊழியர்களுக்கான DA அளவீட்டை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி தடை..இந்த 4 பங்குகளுக்கு கைகொடுக்கலாம்..!
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு தற்போது பல முறை உயர்த்திய பின்பு அகவிலைப்படி (DA) 31 சதவீதமாக இருக்கும் நிலையில் நடப்பு ஆண்டுக்கான அகவிலைப்படி கணக்கீட்டில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அளவு 34 சதவீதமாக உயர உள்ளது.
ஜனவரி மற்றும் ஜூலை
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) ஜனவரி மற்றும் ஜூலை என ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு புதுப்பிக்கப்படுகிறது. 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு மத்திய அரசு பணியிடத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தில் பெரிய அளவு மாற்றம் ஏற்பட்டது.
கொரோனா தொற்று
இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்குப் பின்று மத்திய அரசு உயர்த்திய அகவிலைப்படி (DA) மூலம் ஊழியர்களின் சம்பளம் கூடுதலாக அதிகரித்தது. பொதுவாக அகவிலைப்படி அளவை மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய அடிப்படை ஊதியத்தில் பெருக்குவதன் மூலம் DA கணக்கிடப்படும்.
அகவிலைப்படி சதவீதம்
பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி சதவீதம் அளவீட்டைக் கீழே உள்ள பார்முலா வைத்து தான் கணக்கிடப்படுகிறது.
அகவிலைப்படி சதவீதம் = ((கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) -115.76)/115.76) x 100
AICPI என்பது All-India Consumer Price Index
7th Pay Commission: Good news for Central government employees, DA may hike again soon
7th Pay Commission: Good news for Central government employees, DA may hike again soon 7வது சம்பள கமிஷன்: மீண்டும் DA உயர்வு.. விரைவில் அறிவிப்பு வெளியாகும்..!