நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பேரூராட்சி தேர்தலைப் பொருத்தவரை மொத்தமுள்ள 7621 இடங்களில், 196 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நான்கு வார்டுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 12 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7407 இடங்களில்,
திராவிட முன்னேற்றக் கழகம் 4388 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக 1206 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.
பாஜக 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 368 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் இருவத்தி ஆறு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 101 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி எழுபத்தி மூன்று இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 66 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 12 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 13 இடங்களிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 34 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 6 இடங்களிலும், புதிய தமிழகம் மூன்று இடங்களிலும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, டிஎஸ்பி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.