புவியில் வாழும் உயிர் ஜீவன்களுக்கு இருக்கும் குறைபாட்டில் மிகவும் துயரமானது பார்வை திறன் குறைபாடாகும். இவர்களின் துயரை துடைக்க கோடி கரங்கள் போதாது. இப்படி பட்ட மக்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் தற்காலத்தில் அவர்களுக்கு புத்துயிரை கொடுத்து வருகிறது. தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் அவர்களை பிறரை போலவே செயல்பட வைக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவரான இனியன், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஸ்மார்ட் குச்சியைக் உருவாக்கி உள்ளார். வாய்ஸ் அசிஸ்டன்ட் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குச்சியுடன், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் வெளியே பயம் இல்லாமல் சென்று வர முடியும்.
பெண்களே உஷார்… உங்களை துரத்தும் ரகசிய கண்கள்… கண்டுபிடிப்பது எப்படி?
மாணவரின் புதிய கண்டுபிடிப்பு
அதாவது, இந்த குச்சியைக் கையில் வைத்திருக்கும் பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி, தான் செல்லும் வழியில் ஏதேனும் தடங்கல் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினால், அதனைத் தொடர்ந்து அவர் பயணிக்கும் பாதையில் எதேனும் பொருள்களே, தடங்கலோ தென்பட்டால், உடனடியாக அவருக்கு சமிஞ்சை மற்றும் குரல் மூலம் அறிவிக்கப்படும்.
உலக நிறுவனங்கள் சில இது போன்ற குச்சிகளை குறித்து ஆய்வு செய்து வரும் வேளையில், பள்ளி மாணவனின் இந்த கண்டுபிடிப்பு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. “இது சும்மா ட்ரையல் மட்டும் தான். இன்னும் நெறைய தொழில்நுட்பம் இதுல புகுத்த வேண்டி இருக்கு” என்று மாணவன் கூறியிருப்பது பார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளிடத்தில் மேலும் நம்பிகை விதைத்திருக்கிறது.
இது குறித்து மாணவரின் தந்தை, “இனியனோட ஸ்கூல்ல இந்த வாரம் சயின்ஸ் எக்ஸ்போ. அதுக்கு அவன் செஞ்சிருக்கும் பிராஜெக்ட். 3 நாளா ஏதேதோ உருட்டிக்கிட்டு இருந்தான்…நம்ம வேலை அந்த குச்சி வாங்கி கொடுத்ததுதான்,” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகின் இமைகள்
2012 ஆம் ஆண்டுவரை மட்டும் உலகில் 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அதில் 246 மில்லியன் நபர்கள் குறைந்த பார்வையிழப்பும் மற்றும் 39 மில்லியன் நபர்கள் முழுமையாக பார்வைத் திறனை இழந்தவர்களாகவும் இருந்தனர். கண்பார்வை இழந்தவர்களில் 90% விழுக்காடு நபர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படுகின்றனர்.
பழைய பணம்… நிறைய துட்டு – எப்படி சாத்தியம்?
பார்வைத் திறன் குன்றிய அனைத்து மக்களிலும் 82 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். கிட்டத்தட்ட 1.4 மில்லியன் 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் பார்வையற்றவர்களாக வாழ்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாக வலம் வருகிறது.
Read More:
T-Shirt வாங்குனா கிருமிகள் அண்டாது – Xiaomi எடுக்கும் புது ரூட்!வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!சியோமி Pad 5 டேப்லெட்டுடன் மல்லுக்கட்ட வரும் Oppo பேட்!