பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அஞ்சலகத்தின் சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினை அஞ்சலகத்தில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். வங்கியிலும் தொடங்கிக் கொள்ளலாம்.
இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இந்தியர்களான யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆகும். இது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அரசால் மாற்றம் செய்யப்படுகின்றது.
ரஷ்யா கைப்பற்றிய 2 உக்ரைன் பகுதிகள் மீது ‘நிதியியல் தடை’.. அமெரிக்கா அதிரடி..!
முதலீடு?
இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதே அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு 80சி பிரிவின் படி வரிச்சலுகையும் உண்டு. இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.
முதிர்வு காலம்
இந்த திட்டத்திற்கு எதிரான கடனும் வாங்கிக் கொள்ளலாம். இந்த கணக்கு தொடங்கப்பட்ட 15 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சியடையும். இதனை தனி நபராகவும் தொடங்கிக் கொள்ளலாம். இருவர் இணைந்தும் ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். அதேபோல 7 வருடங்களுக்கு பிறகு இடையில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
நீட்டித்துக் கொள்ளலாம்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். எனினும் இந்த கணக்கினை 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம். இது மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதம் அதிகம். குறிப்பாக வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டங்களை காட்டிலும் வட்டி அதிகம் என்பதால், சிறந்த திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
வட்டி விகித கணக்கீடு
பிபிஎஃப் வட்டியானது 5ம் தேதிக்கு முன்பு டெபாசிட் செய்யப்பட்டால், வட்டி ஒரு மாதத்திற்கு செலுத்தப்படும். அதாவது பிபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு மாதத்தின் 5ம் தேதி முதல் கடைசி நாள் வரை ஒரு நபரின் கணக்கில் குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால்
துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.
PPF complete guide for investors: check details here
PPF complete guide for investors: check details here/அசத்தலான அஞ்சலக திட்டம்.. PPFல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன..!