மாஸ்கோ : உக்ரைனின் கிழக்கே இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி பகுதியாக அங்கீகரிப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதையடுத்து ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது. ரஷ்யாவின் கிழக்கே உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களைச் சேர்ந்த பிரிவினைவாதிகள், உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு அளித்து ரஷ்ய அதிபர் புடின், நேற்று புதிய அறி விப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி உடைய பகுதியாக அங்கீகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்த சூழ்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியதாவது, உக்ரைனில் இரண்டு ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் நிதியுதவி மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி ரஷ்ய அரசாங்கத்துக்கு மேற்கத்திய நாடுகள் நிதி வழங்காது. உக்ரைன் விவகாரத்தில் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைக்கு கால அவகாசம் உள்ளது. இதை மீறி ரஷ்யா தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அமெரிக்கா “இந்த தடைகளை அதிகரிக்கும்” என்றார்.
தூதக அதிகாரிகள் திரும்ப அழைப்பு
உக்ரைனில் உள்ள தமது நாட்டு தூதரக அதிகாரிகளை திருப்பி அழைத்துக் கொள்ள ரஷ்யா. முடிவு செய்துள்ளது .
பார்லி. அனுமதி
தேச பாதுகாப்பு நலன்களுக்காக வெளிநாடுகளில் தமது ராணுவத்தை பயன்படுத்த அதிபர் புதினுக்கு ரஷ்யாவின் நாடாளுமன்ற மேலவை, அதிகாரமும், அனுமதியும் அளித்துள்ளது.
ஜெர்மன் அதிரடி
உக்ரைனின் எல்லை பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவிலிருந்து ஒரு வரும் மிகப்பெரிய எரிவாயு குழாய் திட்டத்தை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது.
Advertisement