ரஷ்யா பல ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து இரு பகுதிகளைக் கைப்பற்றியதை அடுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தகம், பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது.
தற்போதைய நிலையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராகி இருப்பதாக அறிவித்திருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை மூலம் இந்திய மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ரஷ்யா கைப்பற்றிய 2 உக்ரைன் பகுதிகள் மீது ‘நிதியியல் தடை’.. அமெரிக்கா அதிரடி..!
சூரியகாந்தி எண்ணெய்
2021 ஆம் ஆண்டில், இந்தியா 1.89 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யை இறக்குமதி செய்தது – இதில் 70% உக்ரைனிலிருந்து மட்டும். ரஷ்யா 20% மற்றும் மீதமுள்ள 10% அர்ஜென்டினாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது உக்ரைன் நாட்டை ரஷ்யா கைப்பற்றின், ரஷ்யா மீது வர்த்தகத் தடை விதிக்கப்படும். இதனால் சூரியகாந்தி விதை எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் விலை உயரும்.
இயற்கை எரிவாயு
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெரும் பகுதி இயற்கை எரிவாயு உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா தனது 50 சதவீத எரிவாயு தேவையை உக்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) மூலம் பூர்த்திச் செய்கிறது. இதேபோல் ஒரு சிறிய பகுதி ரஷ்யாவிலிருந்து இறக்குமதி இந்தியா இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் அதிகரிக்கும்.
மருந்து ஏற்றுமதி
உக்ரைனுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கியமான பொருட்களில் மருந்துப் பொருட்கள் அடங்கும். ஜெர்மனி மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக உக்ரைனுக்கு அதிக மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் வர்த்தகத்தை இழக்க நேரிடும்.
கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவீட்டை தொட்டு உள்ள நிலையில் 5 மாநில தேர்தலுக்குப் பின்பு இந்தியாவில் பெட்ரோல் விலை 120 ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கிறது. இதனால் வீட்டில் உபயோகிக்கும் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக அதிகரிக்கும்.
கோதுமை
ரஷ்யா உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராகவும், உக்ரைன் நான்காவது பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது. உலகளவில் மொத்த கோதுமை ஏற்றுமதியில் இரு நாடுகளும் கிட்டத்தட்ட கால் பங்கைக் கொண்டுள்ள நிலையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் கோதுமை விநியோகம் பாதிப்பது மட்டும் அல்லாமல் விலையும் அதிகரிக்க உள்ளது.
பார்லி
உலகின் டாப் 5 பார்லி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் உக்ரைன் முக்கிய இடத்தை வகிக்கும் நிலையில், ரஷ்யா உக்ரைன் நாட்டைக் கைப்பற்றினால் அந்நாட்டில் இருந்து பார்லி ஏற்றுமதி கட்டாயம் பாதிக்கும். இதனால் பார்லி விலை உயர்வது மட்டும் அல்லாமல் விநியோகம் குறைந்து அதிகப்படியான தட்டுப்பாடும் நிலவும்.
பல்லேடியம்
உலகளவில் உலோகத்தை உலகின் மிகப்பெரிய பல்லேடியம் உலோகத்தின் ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது.
வாகனத்தின் எக்சாஸ்ட் அமைப்புகள் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான உலோகமான பல்லேடியத்தின் விலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
Russia-Ukraine crisis: How it impacts Indian common man
Russia-Ukraine crisis: How it impacts Indian common man இந்திய மக்களை வாட்டிவதைக்கப் போகும் ரஷ்யா-உக்ரைன் பிரச்சனை..!