கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்ட அனைவரின் மரணத்திற்கும் கோவிட் தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழந்தவர்களில் பலர் சிறுவயது முதல் நாட்பட்ட நோய்களுக்கு நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு மரணிப்பவர்களுக்கு சிறுநீரக நோய் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் மரணத்துக்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக விசேட வைத்தியர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் தொற்றுக்குள்ளானதன் பின்னர், நீண்டகால நோய்களில் ஏற்படும் சிக்கல்களினால் இவர்கள் உயிரிழப்பதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு இதுவரையில் செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசியை பெறாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் மேற்கொள்ள வேண்டும் என்றும், அது பொறுப்புள்ள பிரஜைகளின் கடமை மற்றும் சமூகப் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.