கியூ:
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று முன்தினம் அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷ்யா தனது படைகளை அப்பகுதியில் நிலைநிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், ரஷ்யா படையெடுப்பின் அச்சுறுத்தலால் உக்ரனில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறவேண்டும் என உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்…கிழக்கு உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதல்- பொதுமக்கள் பீதி