உக்ரைனில் உள்ள அனைத்து தூதரக ஊழியர்களையும் ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பிரதிநிதியை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் Odessa நகரில் உள்ள தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை ரஷ்யக் கொடிகள் அகற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன.
காலை தூதரகத்தை விட்டு பல கார்கள் வெளியேறியதாக என Odessa நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் பணியில் இருந்த உக்ரேனிய தேசிய காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக உக்ரைனில் இருந்து தூதரக ஊழியர்களை வெளியேற்றுவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது ஒரு சாதாரண நடைமுறை. இப்போது இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் உள்ளன என தூதரக ஊழியர் தெரிவித்ததாக TASS செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரித்ததற்காக ரஷ்யாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளியுவுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை பரிசீலிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.