அமெரிக்கா
தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவைன் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு
ரஷ்யா
தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே,
உக்ரைன்
எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
அதன் தொடர்சியாக, நேட்டோ படைகள் கிழக்கு உக்ரைனில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்தது. மேலும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர்
ஜோ பைடன்
பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்தார், ஆனால், உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, ரஷ்ய படைகள் சிலவற்றை பாசறைக்கு திரும்புமாறு அந்நாட்டு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. இதனால், போர் பதற்றம் தணிந்த நிலையில், எல்லையில் ரஷ்ய படைகள் இன்னும் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்போம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் – இந்தியா பேசியது என்ன?
மேலும், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை நேரில் சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரஷ்யா மீது இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் முதற்கட்ட பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்தநிலையில், உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார் எனவும் உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, சர்வதேச அளவில் அவசர நிதி பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ரஷ்யாவுக்கான ஸ்விஃப்ட் முறையையும் அமெரிக்கா துண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது