உச்சகட்ட போர் பதற்றம்… நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்… பொதுமக்கள் பீதி

உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த ரஷிய அதிபர் புதினுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களையும் ரிஷியா அங்கீகரித்துள்ளது.

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு நாடாளுமன்றத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா தமது துருப்புகளை நகர்த்தி வருகின்றது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் பளிச்சென காட்டியுள்ளன.

இதனால், உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்ரைனில் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது பொருளாதார தடை – பிரதமர் அதிரடி அறிவிப்பு!

டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து, நாட்டின் பிற பகுதிகள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த உத்தரவு 30 நாட்கள் லரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் அவசர நிலை நீடிக்கப்படலாம் என்றும் உக்ரைன் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலும் அரசின் அவசர நிலை பிரகடன அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வெடிகுண்டு வீச்சு: உக்ரைன்- ரஷியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கிழக்கு உக்ரைனில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஷ்சஸ்தியா பகுதியில் குடியிருப்பு பகுதிகள் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள சேதமடைந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்கள்: ஜோ பைடன் அறிவிப்பு!

கிழக்கு உக்ரைனில் உள்ள டென்ட்ஸ்க் மாகாணத்தின் ஒரு பகுதி அரசின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.