லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த நிலையில்,உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறைய விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும் அந்த சம்பவ இடத்தில் ஆஷிஷ் மிஸ்ரா இருந்துள்ளார். எனவே, அவரை முக்கிய குற்றவாளியாக கூறி சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஷிஷ் மிஸ்ராவை கைது செய்தது.சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.
மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. மேலும், உள்ளூர் வாக்காளர்களின் பின்னடைவைத் தவிர்க்க, அவரை முக்கிய அரசியல் நிகழ்வுகளில் இருந்து கட்சி ஒதுக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH | MoS Home Ajay Mishra Teni leaves from a polling booth in Banbirpur of Lakhimpur Kheri, after casting his vote for the fourth phase of #UttarPradeshElections2022pic.twitter.com/kgRpdoC9GP
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 23, 2022
இந்த நிலையில், தேர்தலில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா டெனி லக்கிம்பூர் கேரியின் பன்பீர்பூரில் வாக்களித்தார். அதன்பின் அவர் வாக்குச் சாவடியில் இருந்து 200க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை பாதுகாப்புடன் பத்திரமாக வெளியேறினார். இந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.