லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய வாக்குப்பதிவு, 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 22.62 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் பகல் 1மணி நிலவரப்படி, 37.45% வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.