உ.பி. தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 22.62% வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி அங்கு 22.62% வாக்குப்பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பி, பிலிபிட் தொகுதியில் அதிகபட்சமாக வாக்குப்பதிவாகியுள்ளது.
அங்கு 11 மணி நிலவரப்படி 27.43% வாக்குப்பதிவானது. அதனையடுத்து ஃபதேபூரில் 22.49% வாக்குப்பதிவாகியுள்ளது. ஹர்தோய் தொகுதியில் மிகக் குறைவாக 22.27% வாக்குப்பதிவாகியுள்ளது.

59 தொகுதிகளில் களம் காணும் 624 வேட்பாளர்கள்: இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறி விவசாயிகள் பத்திரிகையாளர் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் உ.பி.யில் பாஜக விவசாயிகள் ஆதரவை பெருமளவில் இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதும் உ.பி. பஞ்சாப் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை ஆசுவாசப்படுத்தும் முயற்சி என்றே விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் லக்கிம்பூர் கேரியும் அடக்கம். இதுதவிர தலைநகர் லக்னோ, இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதால் சர்ச்சையில் சிக்கிய உன்னாவ் பகுதி, சோனியா காந்தியின் கோட்டையான் ரே பரேலி, பாஜக எம்.பி. வருண் காந்தியின் தொகுதியான பிலிபிட் என பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அடுத்ததாக 5,6,7 ஆம் கட்ட தேர்தல்கள் முறையே பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7 தேதிகளில் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.