சித்தார்த்,
சமந்தா
2013 ம் ஆண்டு நடித்த படத்தை தற்போது மீண்டும் தமிழில் ரீமேக் செய்ய போகிறார்களாம். இந்த படத்தின் கதை தற்போது நான்காவது முறையாக ரீமேக் செய்யப்பட உள்ளது தான் இதில் ஹைலைட்டே.
2013 ம் ஆண்டு
சித்தார்த்
, சமந்தா நடித்து தெலுங்கில் வெளிவந்த படம்
ஜபர்தஸ்த்
. பெண் இயக்குனரான நந்தினி ரெட்டி இயக்கிய இந்த படம் 2013 ம் ஆண்டு பிப்ரவரி 22 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு செம ஹிட் ஆனது. நல்ல வசூலையும் பார்த்தது
அடடே.. இதென்னய்யா புது ட்விஸ்ட்: சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விக்ரம்..?
சமந்தா-சித்தார்த் காதலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததே ஜபர்தஸ்த் படம் தான். நிஜத்தில் தீவிரமாக காதலித்து வந்த இந்த ஜோடி திரையில் ஒன்று சேர்ந்து நடித்ததும் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.30 கோடிகளை வசூலித்தது. இது தவிர சேட்டிலைட் உரிமம், தியேட்டர் உரிமை போன்றவற்றில் சில பல கோடிகளை வருமானமாக இந்த படம் பார்த்தது.
தெலுங்கில் செம ஹிட் ஆனதால், இதன் உரிமத்தை அப்படியே வாங்கி தமிழிலும் சித்தார்த், சமந்தாவை வைத்தே படத்தை வெளியிடலாம் என நினைத்து இதன் உரிமத்தை வாங்கினார் டைரக்டர் லிங்குசாமி. ஜபர்தஸ்த் படத்தை தமிழில் டப் செய்து
டும் டும் பீ பீ
என்ற பெயரில் வெளியிட உள்ளதாக அறிவித்தார் லிங்குசாமி.
ஆனால் இந்த படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு என்ன காரணம் என விசாரித்து பார்த்ததில் 2010 ம் ஆண்டு பாலிவுட்டில் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த Band Baaja Baarat படத்தின் அப்பட்டமான காப்பி தான், ஜபர்தஸத் படமாம். இந்த படத்தின் கதையை யாஷ் ராஜ் ஃபிலிம்சின் அனுமதி பெறாமலேயே ரீமேக் செய்து கோடி கணக்கில் வருமானம் பார்த்துள்ளனர். இதனால் தான் ஜபர்தஸ்த் படத்தை தயாரித்த
சாய் கணேஷ் ப்ரொடக்ஷன்ஸ்
மீது தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா வழக்கு தொடர்ந்தார்
இதற்கிடையில் இதை படத்தை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனமே ஆஹா கல்யாணம் என்ற பெயரில் 2014 ல் தமிழில் வெளியிட்டனர். புதுமுக இயக்குனரான கோகுல் கிருஷ்ணா இயக்கிய இந்த படம் பாசிடிவ் கமென்ட்களை பெற்றது. இந்நிலையில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜபர்தஸ்த் படத்தை டிவிவி, சிவி, ப்ளூ ரே டிஸ்க், டிவி உள்ளிட்ட எந்த முறையிலும் ரிலீஸ் செய்யக் கூடாது என தடை விதித்தது.
ஜபர்தஸத் படம் ரிலீசாகி நேற்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஏற்கனவே இந்த படத்தின் கதை 3 முறை ரீமேக் செய்யப்பட்டு விட்டது. இந்த படத்திற்கு தடை இருக்கும் நிலையில் Band Baaja Baarat படத்தின் கதையை
நானி
மற்றும் வானி கபூரை வைத்து தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக யாஷ்ராஜ் ஃபிலம்ஸ் அறிவித்துள்ளது. இதனால் லிங்குசாமியின் டும் டும் பீ பீ படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆஹா கல்யாணம் படத்திற்கும் கிட்டதட்ட ஆரம்பத்தில் இதே போல ஒரு பிரச்சனை வந்ததாம்.
சமந்தா, சித்தார்த் நடித்த படம் என்பதால் தான் இதற்கு இத்தனை டிமான்டாம். ஆனால் அவர்கள் இருவரின் காதல் 2015 ல் முடிவுக்கு வந்து, இருவரும் பிரிந்து விட்டனர். அதற்கு பிறகு சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து, பிறகு அதுவும் விவாகரத்தில் முடிந்து விட்டது. ஆனாலும் சமந்தா மற்றும் சமந்தாவின் படங்கள் மீதான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதை ரசிகர்கள் குழப்பத்துடன் பார்த்து வருகின்றனர்.
மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?