ஐடி ஊழியர்களுக்கும் & பிரெஷ்ஷர்களுக்கும் ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொல்வதை கேளுங்க!

சென்னை: ஐடி துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய ஒப்பந்தங்களையும் போட்டு வருகின்றன.

இதற்கிடையில் ஐடி துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் விஷயம் அட்ரிஷன் விகிதமாகும்.

ஓரு புறம் அனுபவம் வாய்ந்த திறனுள்ள ஊழியர்களுக்கு பல சலுகைகளை நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன.

ஐடி ஊழியர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு.. டிசிஎஸ், விப்ரோ, காக்னிசண்ட் சொல்வதென்ன?

 பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல்

பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல்

இதற்கிடையில் பிரெஷ்ஷர்களுக்கான பணியமர்த்தல் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பிரெஷ்ஷர்களுக்கான சராசரி சம்பள விகிதமும் அதிகரித்து வருகின்றது. ஊழியர்களுக்கான சம்பள விகிதமும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மொத்தத்தில் ஐடி ஊழியர்களுக்கு இது பொன்னான காலமாக உள்ளது.

 ஐடி நிறுவனங்களின் பலே திட்டம்

ஐடி நிறுவனங்களின் பலே திட்டம்

2022ம் நிதியாண்டில் முன்னணி நிதியாண்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசண்ட், ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, அசென்ஞ்சர், கேப்ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே 2.3 லட்சம் புதிய பட்டதாரிகளை பணியர்த்தியுள்ளன. இது வரலாற்று எண்ணாகும். இது 2023ம் நிதியாண்டில் இன்னும் விரிவுபடுத்தலாம் என முன்னணி ஐடி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

 டிசிஎஸ்
 

டிசிஎஸ்

டிசிஎஸ்-ன் தலைமை மனிதவள அதிகாரியானது மிலிந்த் லக்காட், டிசிஎஸ் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ஏற்கனவே 77,000 பேரை பணியமர்த்தியுள்ளது. 4வது காலாண்டில் இன்னும் சிலரை பணியமர்த்தும் என தெரிவித்துள்ளார்.

 காக்னிசண்ட்

காக்னிசண்ட்

இதே காக்னிசண்ட் (ஜனவரி – டிசம்பர் காலத்தில்) இந்தியாவில் 33,000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்தியது. இது கடந்த 2020ம் ஆண்டில் 17,000 பேராக இருந்தது. 2022ல் நாங்கள் 50,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம் என காக்னிசண்டின் தலைமை செயல் அதிகாரியான பிரையன் ஹம்பரிஸ் கூறியுள்ளார்.

விப்ரோ

விப்ரோ

இதே விப்ரோ நிறுவனம் 2022ம் நிதியாண்டில் கேம்பஸ் மூலமாக 70% பேரை பணியமர்த்தியுள்ளது என்று தலைமை செயல் அதிகாரியான தியரி டெலாபோர்ட் கூறுகிறார்.

சமீபத்திய UnearthInsight ஆய்வு நிறுவனம் முன்னணி ஐடி நிறுவனங்கள் 3,50,000 – 3,60,000 பிரெஷ்ஷர்களை நடப்பு நிதியாண்டில் பணியமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிக பணியமர்த்தல் இருக்கலாம்

அதிக பணியமர்த்தல் இருக்கலாம்

கொரோனா, ஓமிக்ரான் என பெருந்தொற்றுகள் தொடர்ச்சியாக இருந்து வரும்போதிலும், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதமான நன்றாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் சிறந்த வருவாய் வளர்ச்சியினை அடைய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டதத்தில் தொடர்ந்து அட்ரிஷன் விகிதம் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இது புதிய பணியமர்த்தலுக்கு வழிவகுக்கும். இது பிரெஷ்ஷர்களுக்கு மட்டும் அல்ல, அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கும் பெரும் வாய்ப்பாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TCS, infosys, wipro, cognizant plans to hiring more in q4, its a great chance to freshers and employees

TCS, infosys, wipro, cognizant plans to hiring more in q4, its a great chance to freshers and employees/ஐடி ஊழியர்களுக்கும் & பிரெஷ்ஷர்களுக்கும் ஜாக்பாட்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ சொல்வதை கேளுங்க!

Story first published: Wednesday, February 23, 2022, 18:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.